ராகுல் காந்தி ராஜினாமா!
புதுடெல்லி: தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது, மோடி தலைமையிலான பி.ஜே.பி கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கமிட்டி இதனை ஏற்க மறுத்துள்ளது.