ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்.. அன்றே சொன்ன 'டிரெண்டிங் ஜோதிடர்' பாலாஜி ஹாசன்.. !

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்.. அன்றே சொன்ன 'டிரெண்டிங் ஜோதிடர்' பாலாஜி ஹாசன்.. !

நடந்து முடிந்த அமெரிக்கா தேர்தலில் உலகமே டிரம்ப் அவர்கள் ஜெயிப்பார் என கருத்துகளை வெளியிட்ட நேரத்தில் 300 முதல் 310 இடங்களை பெற்று 'ஜோ பைடன்' தான் வெற்றி பெறுவார் என கணித்து அசத்தினார் 'டிரண்டிங் ஜோதிடர்'  பாலாஜி ஹாசன். அதே போன்றே இலங்கை தேர்தலிலும் அவர் கணித்தது போலவே ராஜபக்சே வெற்றி பெற்றார்.  அதற்கு முன்னரும் 34 க்கும் அதிகமான தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணித்து  தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டு பார்ப்பவர்களை அதிசயப்படுத்தி வருகிறார்.

இப்படி தொடர்ச்சியாக ஜோதிட உலகில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி வரும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் அவர்கள், தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்  அரசியலுக்கு வரமாட்டார் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே News7 தொலைக்காட்சியிலும், வேந்தர் தொலைக்காட்சியிலும் மிகச் சரியாக கணித்துக் கூறினார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.