அயோத்தி பிரசாதத்துடன் அமெரிக்கா, கனடாவில் ராமர் ரத யாத்திரை

அயோத்தி பிரசாதத்துடன் அமெரிக்கா, கனடாவில் ராமர் ரத யாத்திரை
அயோத்தி பிரசாதத்துடன் அமெரிக்கா, கனடாவில் ராமர் ரத யாத்திரை

அயோத்தி பிரசாதத்துடன் அமெரிக்கா, கனடாவில் ராமர் ரத யாத்திரை

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவின் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஒரு மாதம் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ரத யாத்திரை அமெரிக்காவில் உள்ள 48 மாகாணங்களில் உள்ள 851 இந்து கோவில்களை உள்ளடக்கியது. இந்த யாத்திரை அயோத்தியில் உள்ள ராம் மந்திரில் இருந்து 'பிரசாதம்' மற்றும் பூஜித் அக்ஷத்தின் (புனித அரிசி), கலசம் கொண்டு செல்லப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களை மகிழ்ச்சியில் நிரப்பியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில், அமெரிக்காவில் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மார்ச் 25 அன்று அமெரிக்காவின் சிகாகோவில் தொடங்கி 8,000 மைல்களுக்கு மேல் இந்த யாத்திரை பயணிக்கிறது. இந்த ரத யாத்திரை அமெரிக்காவில் உள்ள 851 கோயில்களுக்கும், கனடாவில் சுமார் 150 கோயில்களுக்கும் செல்லும் என்று அமிதாப் மிட்டல் கூறினார்.
' ரத யாத்திரையின் நோக்கம் இந்து தர்மத்தின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மக்களுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதாகும்' என்று இந்து மந்திர் அதிகாரமளித்தல் கவுன்சிலின் தேஜல் ஷா கூறினார்.
பல தன்னார்வத் தொண்டர்கள் யாத்திரைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர், அமெரிக்காவில் முதன்முறையாக இந்து சமூகம் இவ்வளவு பெரிய அளவிலான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. ரத யாத்திரை அனைத்து பெரிய கோவில்களை மட்டுமின்றி சிறிய கோவில்களுக்கும் செல்ல உள்ளது.
ஜனவரி மாதம் நடந்த ராமர் கோவில் திறப்பு விழாக்களில் பங்கேற்ற கோவில்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.