டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட 76 அடுக்குமாடிக் குடியிருப்பு: காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தலைநகர் டெல்லியில் உள்ள டாக்டர் பி.டி.மார்க் என்னும் இடத்தில் நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்காக 80 வருட பழமை வாய்ந்த 8 பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு 76 அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,  பல தசாப்தங்களாக  நிலுவையில் உள்ள பிரச்சினைகள் ஒரு தீர்வைத் தேடுவதன் மூலம் தீர்க்கப்படுகின்றன, அதைத் தள்ளிவைப்பதன் மூலம் அல்ல. எம்.பி.க்களின் குடியிருப்புகள் மட்டுமல்ல, வேறு சில திட்டங்களும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.  நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு:

சாம்பல் மற்றும் கட்டுமானக் கழிவுகளிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள், வெப்பத்தில் இருந்து காக்கும் மற்றும் எரிசக்தியை சேமிக்கும் சிறப்பு ஜன்னல்கள், எல்இடி விளக்குகள், குறைந்த எரிசக்தியில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள்,  தண்ணீரை சேமிப்பதற்கான வசதிகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கூரையில் சூரிய ஒளி சக்தி கருவி போன்றவை பொருத்தப்பட்ட பசுமைக் கட்டிடமாக இது விளங்குகிறது. இந்த குடியிருப்பு கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட 14%  குறைவாகவே செலவாகியுள்ளது. கொரோனா தொற்றால் பணிகள் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய காலத்தில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.