சீரடி சாய்பாபா கோவிலுக்கு நாகரிகமாக உடை அணிந்து வர பக்தர்களுக்கு கோரிக்கை

மும்பை :

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர், சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு மராட்டியம், வெளிமாநிலம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் பக்தர்கள் நாகரிகமாக கோவிலுக்கு உடையணிந்து வருமாறு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.இதுதொடர்பாக கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் நாகரிகமாக அல்லது பாரம்பரிய உடையை அணிந்து கோவிலுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி கான்குராஜ் பாகதே கூறியதாவது

நாங்கள் பக்தர்களின் ஆடை குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சிலர் கோவிலுக்கு அநாகரிகமான உடையணிந்து வருவதாக பக்தர்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தன. இது புனித மற்றும் தெய்வீக இடமாகும். எனவே நாகரிகமாகவோ அல்லது இந்திய கலாசார உடைகளை அணிந்து வருமாறு பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம்.