லோக் அதாலத்தில் 3469 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்தில் 3469 வழக்குகளுக்கு தீர்வு
லோக் அதாலத்தில் 3469 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்தில் 3469 வழக்குகளுக்கு தீர்வு

திருவள்ளூர்: தேசிய சட்டப்பணிகள் மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 3469 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி தலைமையில் மாவட்ட நீதிபதி ஏ.எம்.ரவி, தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி வேல்ராஸ், செயலாளர் முத்து, உரிமையியல் நீதிபதி சாண்டலியன் உள்ளிட்ட நீதிபதிகள் 6 அமர்வுகளை ஏற்படுத்தி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.