2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அசத்தல்

2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அசத்தல்
2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச... வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் குவித்தது. கைல் மேயர்ஸ் 51 (27 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஜான்சன் சார்லஸ் 118 ரன் (46 பந்து, 10 பவுண்டரி, 11 சிக்சர்), கேப்டன் ரோவ்மன் பாவெல் 28, ரொமாரியோ ஷெப்பர்ட் 41* ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), ஓடியன் ஸ்மித் 11* ரன் எடுத்தனர்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மார்கோ 3, பார்னெல் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து வென்றது. டி காக் 100 ரன் (44 பந்து, 9 பவுண்டரி, 8 சிக்சர்), ரீஸா ஹென்ரிக்ஸ் 68 ரன் (28 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ரூஸோ 16, மில்லர் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் மார்க்ரம் 38 ரன் (21 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கிளாஸன் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் மொத்தமாக 517 ரன் எடுக்கப்பட்டது. 46 பவுண்டரி, 35 சிக்சர்கள் விளாசப்பட்டன. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்கில் நாளை நடக்கிறது.

தென் ஆப்ரிக்கா 259 ரன் எடுத்து வென்றது, சர்வதேச டி20 வரலாற்றில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட இமாலய இலக்காக அமைந்தது.

 சர்வதேச டி20ல் 2 இன்னிங்சிலும் சேர்த்து 500+ ரன் எடுக்கப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.