"பேசும் தலைமை"
"பேசும் தலைமை"
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 11:00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி "பேசும் தலைமை".
தமிழத்தில் பல்துறை ஆளுமைகளிடம் அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள், சந்தித்த வெற்றி முகடுகள், துறைசார் அனுபவங்களுடன் அவர்களின் குடும்பப் பின்னணியையும் தொகுத்து வழங்குவதுதான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
சினிமா, விளையாட்டு போன்ற பிரபலமான துறைகளைத் தாண்டி, தொழில்துறை, சுகாதாரம், கலை-இலக்கியம், வரலாறு, நீதித்துறை என பல தளங்களில் பயணித்து தமிழகத்தின் அறிவுசார் ஆளுமைகளை போற்றுவது உண்மையில் பாராட்டத்தக்க அம்சமாகும். இந்நிகழ்ச்சியை சுவையாகவும் சுவாரசியமாகவும் அழகு தமிழில் தொகுத்து வழங்குகின்றார் தொகுப்பாளர் விஜயன்.