50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ்
"நம்பிக்கையை கொண்டாடுவோம்" இந்த வரிகளை சொல்லும் பொழுது நமக்கு நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தான். நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பல சாதனைகளை படைத்து தனது தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் இன்று தனது 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
1970-களில் சண்முகா ஸ்டோர்ஸ் என்னும் 720 சதுரடியில் துவங்கப்பட்ட சிறிய பாத்திரக்கடை இன்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அளவிற்கு வளர்ந்து நின்று மக்களின் இதய மாளிகையில் குடியேறியிருக்கிறது இந்நிறுவனம்.
தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸின் கட்டைப் பை இல்லாத நபர்களை காண்பதரிது. நடுத்தர மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்கள் வாங்கிச்செல்லும் துணிகள் மட்டுமல்லாமல், அதை எடுத்து செல்லும் பை மூலமாக அவர்களின் இல்லத்தில் ஒருவராகவே மாறிவிட்டார்கள்.
90களிலிருந்து ரங்கநாதன் தெருவில் கூட்டம் அலை மோதுவதற்கு முக்கிய காரணம் இவர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி, நம்பிக்கை. தி.நகர் என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என்ற பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பு எண்ணில் அடங்காதது. பல ஊர்களில் இருந்து தேனீக்கள் போல மக்கள் சோறு கட்டிக்கொண்டு திருவிழா போல் இந்த கடைக்கு வந்து செல்வது கண்கொள்ளா காட்சி.
வியாபாரயுக்தியும், உழைப்பும் மற்றும் மக்களுக்கு தேவையானவைகள் நியாயமான விலையில் ஒரே இடத்தில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து சாதனை படைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த பொன்விழா ஆண்டில் பொன்னான நேரத்தில் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் மக்களுக்கு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினரான சண்முகசுந்தரம் ராஜரத்தினம், ராஜரத்தினம் சபாபதி மற்றும் குழுமத்தினர் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் இதய பூர்வமாக நன்றியை சமர்பிக்கிறார்கள்.