உலகின் மிகப் பெரிய மார்புக் கட்டி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றம்
உலகின் மிகப் பெரிய மார்புக் கட்டி
ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றம்
• கால்பந்தை விட அளவில் பெரிதான, 13.85 கிலோ எடை கொண்ட கட்டி, 25 வயது நோயாளியின் மார்பிலிருந்து அகற்றம்
• மார்புப் பகுதியின் 90% இடத்தை கட்டி அடைத்துக் கொண்டதால், நுரையீரல்களின் 90% இயக்கம் குறைத்தது. இரு நுரையீரல்களும் 10% மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன.
சென்னை 2021 அக்டோபர் 21 : மருத்துவ ரீதியாகச் சவாலான ஓர் அறுவை சிகிச்சையை ஃபோர்டிஸ் மெமோரியல் ஆராய்ச்சி நிறுவனம் (Fortis Memorial Research Institute) மருத்துமனையில், சிடிவிஎஸ் (CTVS), இயக்குனரும், தலைவருமான, டாக்டர் உத்கீத் திர், தனது மருத்துவர் குழுவுடன் இணைந்து, 25 வயது மதிக்கத்தக்க நோயாளியின் மார்பிலிருந்த 13.85 கிலோ எடை கொண்ட உலகின் மிகப் பெரிய மார்புக் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். கிடைத்துள்ள மருத்துவ சஞ்சிகைகள் மற்றும் மருத்துவ ஆய்வறிக்கைகளின்படி 2015இல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட உலகின் மிகப் பெரிய மார்புக் கட்டி குஜராத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவரின் 9.5 கிலோ மார்புக் கட்டியே ஆகும்.
மூச்சடைப்பு மற்றும் கடுமையான மார்பு வலியுடன் தேவேஷ் சர்மா குருகிராம் ஃபோர்டிஸ் மெமோரியல் ஆய்வு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக அவரால் கடந்த 2-3 மாதங்களாக படுக்கையில் நேராகப் படுக்க முடியவில்லை. நகரிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்குச் சென்ற போது அங்குள்ள நுரையீரல் மருத்துவர் மார்பக சிடி ஸ்கான் பரிசோதனை எடுக்கப் பரிந்துரைத்தார். சிடி ஸ்கான் அறிக்கையில் மார்பில் பெரிய கட்டி இருப்பதையும், அது மொத்த மார்புப் பகுதியின் 90% அடைத்துக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இக்கட்டி இதயத்தை அழுத்தியதால் அதன் இரு நுரையீரல்களும் 10% மட்டுமே இயங்கின. ஏனைய முத்த மருத்துவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டாக்டர் திர்-ஐச் சந்திக்குமாறு தேவேஷிடம் ஆலோசனை கூறினர்.
அறுவை சிகிச்சையின் தீவிரத் தன்மையுடன், மிக அரிதான ஏபி நெகடிவ் ரத்தப் பிரிவைச் சேர்ந்தவராகவும் நோயாளி இருந்தார். மார்பில் மிகப் பெரிய கட்டியுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சையின் போது மயக்க மருந்து செலுத்துவது நோயின் தீவிரத்தை இன்னும் அதிகரிக்கும். அதிக எடை கொண்ட கட்டி என்பதால், மயக்க மருந்து செலுத்தும்போது, இதயம் சுருங்கிவிடும். இது இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இரத்த அழுத்தம் இல்லாமல் செய்துவிடும். எனவே இத்தகைய சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், அறுவை சிகிச்சை அபாயத்தைக் குறைக்கவும், தேவைப்பட்டால், அவசர நுரையீரல் பை-பாஸ் அறுவை சிகிச்சைக்காக நோயாளிக்கு சம்மந்தப்பட்ட இடத்தில் மட்டும் மயக்க மருந்து செலுத்த மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அறுவை சிகிச்சையின் போது எந்தவிதமான சிக்கல்களும் ஏற்படாமலிருக்க அறுவை சிகிச்சைக்கு முன்பு
மயக்க மருந்து செலுத்த மயக்க மருத்து வல்லுனர் குழு தயார் நிலையில் இருந்தது.
சிக்கலான அறுவை சிகிச்சை குறித்து குருகிராம் ஃபோர்டிஸ் மெமோரியல் மருத்துவமனை, சிடிவிஎஸ், இயக்குனரும், தலைவருமான, டாக்டர் உத்கீத் திர் கூறுகையில் ‘மார்பிலுள்ள பெரிய கட்டி நுரையீரல்களை அழுத்தியதால், அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில், நோயாளி ஆபத்தான நிலையில் எங்களிடம் வந்தார். 4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் இடையிலுள்ள மார்பு எலும்பை வெட்டி எடுத்து மார்பின் இரு பக்கங்களும் திறக்கப்பட்டன. மருத்துவத் தொழில்நுட்பத்தில் இதற்கு ஷெல் இன்சிஷன் என்று பெயர். கட்டியின் பெரிய அளவு காரணமாக அதைச் சிறு துவார சிகிச்சை மூலம் அகற்ற முடியவில்லை. எனவே நோயாளியின் மார்பிலிருந்த பெரிய கட்டியை வெட்டி எடுத்து அகற்றினோம். அறுவை சிகிச்சை முழு நேரமும் இரத்த ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்வது முக்கியமாக இருந்தது. அறுவை சிகிச்சை மிகத் துல்லியமாகவும், தீவிர கவனத்துடன் நடைபெற வேண்டியது அவசியமாகும். துல்லியம் சிறிது தவறினாலும் நோயாளி இறக்கும் சாத்தியங்கள் மிக அதிகம். மார்பின் முழுப் பகுதியையும் பெரிய கட்டியின் ஆக்கிரமித்துக் கொண்டதால், பல்வேறு இரத்த நாளங்களின் ஊடே அறுவை சிகிச்சை செய்வது சவாலாகவும், சிரமமாகவும் இருந்தது’ என்றார்.
டாக்டர் உத்கீத் திர் மேலும் தொடர்கையில் ‘அறுவை சிகிச்சைக்குப் பிறகு போதிய அளவு இரத்தக் கசிவைத் தடுத்து நிறுத்திச், செயற்கை சுவாசக் குழாய்களையும் அகற்றிய பின்னர், நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அடுத்த நாளே மாற்றப்பட்டார். தொடக்கத்தில் வைக்கப்பட்ட வெண்டிலேட்டர் பிறகு அகற்றப்பட்டது. இருப்பினும் இரத்தத்திலுள்ள கரியமில வாயு அதிகரிக்கவே, ஆரம்பத்தில் சுருங்கியிருந்த நுரையீரல்கள் மீண்டும் விரிவடையத் தொடங்கின. செயற்கை சுவாசம் இல்லாமல் தொடக்கத்தில் சரி செய்ய நினைத்தோம். ஆனால் 48 மணி நேரம் கழித்து மீண்டும் வெண்டிலேட்டர் பொருத்தினோம். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மூச்சுக் குழாய்த் துளைப்பு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். அடர்த்தியான ஒட்டு இழைத் திசுக்கள் உருவானதால், கழுத்தில் சிறு துவாரம் மூலம் செலுத்தப்பட்ட குழாய் வழியே கசிவுகளை அகற்றினோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் 39 நாள்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு, அறைக்கு மாற்றப்பட்டதுடன், சிறு தூவரம் மூலம் செலுத்தப்பட்ட குழாயும் அகற்றப்பட்டது. குறைந்தபட்ச பிராணவாயுவுடன், நோயாளி படிப்படியாகக் குணமடைந்து வருகிறார்’ என்றார்.
மருத்துவ சாதனை குறித்து ஃபோர்டிஸ் மெமோரியல் ஆய்வு மருத்துவமனை மண்டல இயக்குனர் டாக்டர் ரிது கார்க் பேசுகையில் ‘ஃபோர்டிஸ் நினைவு ஆய்வு மருத்துவமனையிலுள்ள குழு உயிர்களைக் காப்பாற்ற முனைவதுடன், மிகச் சிறந்த மருத்துவ சாதனைகளையும் படைக்கிறது. ஒவ்வொரு தீவிர
நோயாளியும் நுணுக்கமாக பரிசோதிக்கப்பட்டு அவருக்கான சிகிச்சையை மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய பல்துறை மருத்துவக் குழு முடிவெடுக்கிறது. இந்த நோயாளியைப் பொருத்தவரை, ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது கட்டி மிகப் பெரிது என்பதால் சீராக மூச்சு விட முடியவில்லை. இது மிக அரிதான அதிக அபாயமுள்ள சிகிச்சையாகும். டாக்டர் உத்கீத் திர் அபாரத் திறன், அனுபவம் மற்றும் குழுவின் உதவியுடன், இந்நோயாளியின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, மிகப் பெரிய அபாயமுள்ள அறுவை சிகிச்சையை மேற்கொண்ட நோயாளிக்கு புது வாழ்க்கை தந்த மருத்துவர்களைப் பாராட்டுகிறேன். இதுபோன்ற அறுவை சிகிசைகளின் வெற்றி விகிதத்தை நாம் பெருக்கிக் கொள்ளலாம்’ என்றார்.
About Fortis Healthcare Limited
“Fortis Healthcare Limited – an IHH Healthcare Berhad Company – is a leading integrated healthcare services provider in India. It is one of the largest healthcare organisations in the country with 36 healthcare facilities (including projects under development), 4000 operational beds and over 400 diagnostics centres (including JVs). Fortis is present in India, United Arab Emirates (UAE) & Sri Lanka. The Company is listed on the BSE Ltd and National Stock Exchange (NSE) of India. It draws strength from its partnership with global major and parent company, IHH, to build upon its culture of world-class patient care and superlative clinical excellence. Fortis employs 23,000 people (including SRL) who share its vision of becoming the world’s most trusted healthcare network. Fortis offers a full spectrum of integrated healthcare services ranging from clinics to quaternary care facilities and a wide range of ancillary services.”