கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடக்கிவைத்த கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் 'கிரிக்கெட் அகாடமி'

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடக்கிவைத்த கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் 'கிரிக்கெட் அகாடமி'
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடக்கிவைத்த கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் 'கிரிக்கெட் அகாடமி'
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடக்கிவைத்த கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் 'கிரிக்கெட் அகாடமி'

சென்னை அருகில் உள்ள  ஸ்ரீபெரும்புதூரில் கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்கி கிரிக்கெட் அகாடமியை துவக்கி வைத்தார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.
 
டாக்டர்  ஊர்வசி D. செல்வராஜ்  அவர்களால் 2004 ஆம் ஆண்டுகுயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டது தான் இந்த கிங்ஸ் பொறியியல் கல்லூரி.இக்கல்லூரி அனைத்து சமூக பொருளாதார நிலையில் உள்ள மாணவர்கள் அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயின்ற மாணவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 16 ஆண்டுகள் கடந்த இக்கல்லூரியில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு மாணவரும் வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டு தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இக்கல்லூரியின் நோக்கம்.

இக்கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் திறமையை வெளிப்படுத்த அனைத்துத் துறைகளிலும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி யை உருவாக்கி அதனை  தொடங்கிவைக்க இந்திய கிரிக்கெட் வீரரும் மற்றும் சர்வதேச  ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவை அழைத்திருந்தனர். அவருடன் இந்திய கிரிக்கெட் வீரர் கோவா ஐபிஎல் வீரருமான ஷடாப் பஷீர் ஜகடி அவர்களும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி  மாணவர்களின் கிரிக்கெட் திறமையை வளர்த்துக் கொள்ள உதவியாக அமைந்தது.

மேலும் கிங்ஸ் பொறியியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த சுரேஷ் ரெய்னா கல்லூரிக்கு அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களுடன் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டார். இந்த அறிவியல் கண்காட்சியில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ரோபோடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் உருவாக்கிய பல கண்டுபிடிப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பள்ளி மாணவர்களுடன் சுரேஷ் ரெய்னா அறிவியல் கண்காட்சியை கண்டு ரசித்தார். இந்த கண்காட்சி பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் துறையின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவியாக அமைந்தது.

கிங்ஸ் பொறியியல் கல்லூரிமாணவ மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்தார். குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் மேம்பாடு குறித்த நாடகங்களை வெகுவாக ரசித்து பாராட்டினார்.

கிங்ஸ் பொறியியல் கல்லூரிக்கு வந்திருந்த பள்ளி மாணவ மாணவிகளை உற்சாகப் படுத்துவதற்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகள், அண்ணா யுனிவர்சிட்டி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கிங்ஸ் பொறியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அண்ணா யுனிவர்சிட்டி அளவில் கபடி போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவர்களுக்கும், கைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவிகளுக்கும் சுரேஷ் ரெய்னா அவர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

கிங்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் வந்திருந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் சுரேஷ் ரெய்னாவுடன் ஒரு நாளை கொண்டாடியதற்காக மிகவும் சந்தோஷமும் உற்சாகமும் அடைந்தனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் அனைத்து மாணவ மாணவிகளும் சுரேஷ் ரெய்னாவை போல் வாழ்வில் சாதிக்க, உழைப்பையும் முயற்சியையும் கொடுப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் கிங்ஸ் பொறியியல் கல்லூரி இயக்குனர்அமிர்தராஜ் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.

இவ்விழாவில் கிங்ஸ் பொறியியல் கல்லூரி இயக்குனர் ஜெமிமா அமிர்தராஜ் நன்றியுரை வழங்கினார்,

இவர்களுடன் கிங்ஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜான் ஓரல் பாஸ்கர்,

 திரைப்பட இயக்குனர் விக்டர் ஜெயராஜ்,

கிஷோர் குமார் CEO Gud Company Pvt Ltd,

 சார்லஸ் காட்வின் ZOHO யுனிவர்சிட்டி,

வெங்கடேஷ் குருநாதன் CEO Zenardy Pvt Ltd,

காணான் சபை போதகர் மனோஜ் மற்றும் ஜெயப்பிரகாஷ் Mr World and Mr India champion for body building ஆகியோர் கலந்து கொண்டனர்.