தரகர் சுகேசுடன் பேசியதை ஒப்புக்கொண்ட தினகரன்

தரகர் சுகேசுடன் பேசியதை ஒப்புக்கொண்ட தினகரன்
TTV Dinakaran accepted talking with Sukesh

சென்னை: "இரட்டை இலை" சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் கொடுத்த சம்மனை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீஸ் முன்பு அவர் ஆஜரானார்.

இந்நிலையில், டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தரகர் சுகேசுடன் தொலைபேசியில் பேசியதை டி.டி.வி. தினகரன் ஒப்புக்கொண்டுள்ளார், சுகேஷ் சந்திரசேகரை என்பவர் ஐகோர்ட்டு நீதிபதி என்று நினைத்து தான் அவரிடம் போனில் பேசியதாக தினகரன் கூறியுள்ளார்.

இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) மூன்றாவது நாளாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TTV Dinakaran accepted talking with Sukesh