தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1596 ஆக உயர்வு.கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதிகபட்சமாக கரூரில் 48 பேரும், கோவை ESI மருத்துவமனையிலிருந்து 31 பேரும் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் இதுவரை 635 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் இன்று 55 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது!