அமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் இவ்வளவுதான்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் இவ்வளவுதான்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் இவ்வளவுதான்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் இவ்வளவுதான்


வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சில மாநிலங்களில் மட்டும் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி உள்ளார். 

அதிபர் பதவியை பெறுவதற்கு 270 தேர்வாளர்களின் ஆதரவைப் பெற வேண்டும். தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளர். டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்

அமெரிக்க தேர்தலைப் பொருத்தவரை குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிபர் பதவிக்கான போட்டியில் 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தபோதிலும், வழக்கம்போல் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சிக்கு இடையில்தான் நேரடி போட்டி உள்ளது. ஒட்டுமொத்த வாக்குகளில் 98.4 சதவீத வாக்குகள் இந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களும் பெற்றுள்ளனர். 

ஜோ பைடன் 50.4 சதவீத வாக்குகள் (7,20,32,334) பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப் 48 சதவீத வாக்குகளுடன் (6,85,76,031) இரண்டாம் இடத்தில் உள்ளார். 

லிபர்டேரியன் கட்சி வேட்பாளர் 1.1 சதவீத வாக்குகள் (16,40,107) பெற்று மூன்றாம் இடத்திலும், கிரீன் கட்சி வேட்பாளர் ஹோவி ஹாக்கின்ஸ் 0.2 சதவீத வாக்குகளுடன் (3,27,913) நான்காம் இடத்திலும் உள்ளனர். 

மற்ற வேட்பாளர்களுக்கு மொத்தம் 0.3 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.  அவர்கள் 3,62,454 வாக்குகளை பெற்றுள்ளனர்.