“கீழடி தமிழர்களின் வேரடி..”
“கீழடி தமிழர்களின் வேரடி..”
ஜெயா தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக கீழடி தமிழர்களின் வேரடி..என்ற நிகழ்ச்சியினை கவிஞர் சினேகன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு (14.4.23) காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
வைகை நதி கரையில் சங்க கால நகர நாகரிகத்திற்கு சாட்சியாக இருக்கும் கீழடி அருங்காட்சியத்திற்கு கவிஞர் சினேகன் நேரில் சென்று தமிழர்களின் தொன்மை,கலாச்சாரம்,பண்பாடு,பயன்பாடு, தொழில் விளையாட்டு, வீரம்...இப்படி சுமார் 2600 வருடங்களுக்கு முன்னதாக எப்படி வாழ்வாங்கு வாழ்ந்தார்கள் என்பதனை பிரத்யோகமாக படடுப்பதிவு செய்யப்பட்டு வழங்கவிருக்கிறார்
இதில் கவிஞர் சினேகன் அவர்கள் தனக்கே உரிய கவித்துவமான வரிகளோடு பெருமைமிகு தமிழர்களின் வரலாற்றை உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்காக வழங்குகிறார் .