இரண்டாவது அலையாக கொரோனா நோய் மலேசியாவை தாக்கி வருகிறது
இரண்டாவது அலையாக கொரோனா நோய் மலேசியாவை தாக்கி வருகிறது
மலேசியாவில் கோவிட் 19 தொற்றுநோய்
3 மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு.கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மலேசியாவில் நாடு தழுவிய அளவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எனப்படும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அங்கு தொற்றுப் பரவல் வேகமாகக் கட்டுக்குள் வந்தது.இதையடுத்து அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் நிலைமை கட்டுக்குள் இருந்தபோது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 9,500ஆக மட்டுமே இருந்தது.
இந்நிலையில் சபா என்ற மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார நடவடிக்கைகளால் பலருக்கும் மீண்டும் வைரஸ் தொற்று பரவியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அம்மாநிலத்திற்குச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்தபின் அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.
இதனால் மூன்றே மாதங்களில் மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தினந்தோறும் சராசரியாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 7ஆம் தேதி மலேசியாவில் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் மூவாயிரம் பேருக்கு புதிதாக வைராஸ் தொற்றியது.ஓரிரு மாதங்கள் ச்ற்றே தளர்வு கண்ட இந்த தொற்று இப்பொழுது மீண்டும் தலைவிரிக்க ஆரம்பித்து விட்டது எனலாம் .
இன்று மட்டுமே 5.700 பேர் இத்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.தொடந்து நாடெங்கும் ஊரடங்கு சட்டம் அமல் படுத்த பட்டு வருகிறது .இந்த ஊரடங்கு சட்டம் தொடரும் எனவும் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க படும் என்று அரசாங்கம் கடுமையாந தண்டணையயும் கொடுக்க தவறாது என்று பிரதமர் கூறி உள்ளார்.
மேலும் இரண்டாவது அலையாக இத்தொற்று நோய் மலேசியாவை தாக்கி வருகிறது.நாட்டில் வைரஸ் தொற்றுப்பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது தெரியவந்ததால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது."மலேசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு முழுமையான பொது முடக்க கட்டுப்பாடுக்கான ஆணை (லாக் டவுன்) பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மொகிதீன் யாசின் திங்கட்கிழமை 18/01/2021 மாலையில் அறிவித்தார்.
தற்போது 5 மாநிலங்கள் மற்றும் 3 கூட்டரசுப் பிரதேசங்களில் முழுமையாகவும், ஆறு மாநிலங்களில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜோகூர் பாரு, சபா, புத்தரா ஜெயா, லாபுவான் ஆகிய பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் லாக்டவுன் உத்தரவு அமலுக்கு வருகிறது. ஜனவரி 13 முதல் பிப்பிரவரி 4 ம் தேதி வரை இந்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இரவு 8 மணிக்கு மேல் கடுமையான ஊரடங்கு சட்டம் அமல் படுத்த படுகிறது .ஒரு காரில் இருவர் மட்டுமே பயணம் செய்யலாம் என்றும் கூடினால் நபர் ஒருவருக்கு தலா ரிங்கிட் மலேசியா 1000 .00 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் விதிக்கபட்டு அமல் படுத்த பட்டுள்ளது.
நாட்டின் சுகாதார கட்டமைப்பு கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலன் கருதியே, அவர்களின் உயிரைக் காக்கும் நடவடிக்கையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார்.நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இதனால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்றார்.
கோலாலம்பூர், கிள்ளான் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் 'கோவிட் 19' நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும், 5 மாநிலங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகளில் 70 விழுக்காடு நிரம்பி விட்டதாகவும் அவர் மேலும் கூறினார் பிரதமர் மொகிதீன் யாசின்.
எனவே மக்கள் தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் .அப்போதுதான் வரும் காலங்களில் இந்த தொற்று நோயை குறைக்க முடியும் என்று கேட்டுக் கொண்டார் பிரதமர்.
விஜயமலர்
மலேசிய.