'திருக்குறள் 100'

'திருக்குறள் 100'
'திருக்குறள் 100'
'திருக்குறள் 100'
'திருக்குறள் 100'
'திருக்குறள் 100'

'திருக்குறள் 100'

நடிகர் சிவகுமார் வழங்கும் ' திருக்குறள் 100' திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் தொடங்கி காணும் பொங்கல் வரை தொடர்ந்து 3 நாட்கள் (15.1.23/16.1.23/ 17.1.23 )ஞாயிறு ,திங்கள் மற்றும் செவ்வாய் ) ஆகிய நாட்களில் பிற்பகல் 3:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற பார்வையில் 'திருக்குறள் 100' என்கிற நூலை எழுதி இருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் பரிதி ,பரிமேலழகர் முதல் கலைஞர் ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியுள்ளார்.

 'வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு' என்ற குறளில் தொடங்கி நூறாவது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்துள்ளார்

பெரும் வரவேற்பைப் பெற்ற ' திருக்குறள் 100' சிறப்பு நிகழ்ச்சியாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் தொடங்கி காணும் பொங்கல் வரை தொடர்ந்து 3 நாட்கள் (15.1.23,16.1.23, 17.1.23 ஞாயிறு ,திங்கள் மற்றும் செவ்வாய் ) ஆகிய நாட்களில் பிற்பகல் 3:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.