புதியதொரு நம்பிக்கையுடன்-மீண்டும் பள்ளிக்கு வருகை புரிந்தனர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள்.

மார்ச் 22, 2020 இல் தொடங்கிய கோவிட் தொற்றுநோயின் அபாயத்தை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று குறைந்ததை அடுத்து, தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து எதிர்பார்ப்புகள் மற்றும் உற்சாகத்தின் மத்தியில், முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மை பள்ளி, செப்டம்பர் 1, 2021 அன்று மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. மாணவர் சூழலை பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி சாத்தியமான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வேலம்மாள் பள்ளி மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் வருவதற்கு முன்பு, அனைத்து வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் அனைத்து முக்கியப் பகுதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன.

சுத்திகரிப்பு வசதி, தெர்மல் ஸ்கேனர் வசதி, முகமூடியின் பயன்பாடு மற்றும் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக சமூக விலகல் குறித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளன. பணியாளர்களுக்குப் போதுமான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

 புதிய உற்சாகத்துடன் மாணவர்கள் மீண்டும் வளாகத்திற்குள் அணிவகுத்துச் செல்வதைப் பார்த்ததில் பள்ளி நிர்வாகம் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தது.