வேந்தர் டிவியில் 'சங்கீத ஸ்வரங்கள்'

வேந்தர் டிவியில் 'சங்கீத ஸ்வரங்கள்'

வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி சங்கீதஸ்வரங்கள். ms விஸ்வநாதன், இளையராஜா ,ஏ ஆர் ரகுமான் என எத்தனையோ திரைப்பட இசையமைப்பாளர்கள் உண்டு இவர்கள் அனைவரும் பயன்படுத்திய பாடல்களில் எத்தனை விதமான ராகங்களை பயன்படுத்தியுள்ளனர் ராகங்களின் சிறப்பு அதன் ஆரோகணம் ,அவரோகணம் ,திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட ராகங்கள் என  பல இசை சம்பந்தப்பட்ட விஷயங்களை சுவாரசியமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி சங்கீதஸ்வரங்கள்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நாம் முணுமுணுக்கும் பல சூப்பர் ஹிட் பாடல்கள் எந்த ராகத்தில் உருவாகியது இதை எப்படியெல்லாம் பயன்படுத்தி உள்ளார்கள் என மிக சுவாரசியமாக ரசிகர்களுக்கு விளக்குகிறார் கர்நாடக இசைக்கலைஞர் சசிதரன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பாலாஜி.