வேந்தர் டிவியில் "திசைகள் 4"

வேந்தர் டிவியில் "திசைகள் 4"

வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்  புதிய நிகழ்ச்சி திசைகள் 4.
 இந்த நிகழ்ச்சியில் அரசியல் , பொருளாதாம் மற்றும் சமூக பிரச்சினைகள் நிகழ்வுகளை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் களம். அரசியலில் நடந்து வரும் திடீர் மாற்றங்கள், சமூக மாற்றங்கள், மக்களைப் பாதிக்கும் சம்பவங்கள், பொருளாதார மாற்றங்களால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட நடப்பு நிகழ்வுகளை அந்தெந்த துறை சார்ந்த வல்லுநர்கள், அரசியல் கட்சிகளின் செய்தித்தொடர்பாளர்களைக் கொண்டு நேர்மையாக விவாதம் செய்யப்படுகிறது.
 

இந்த நிகழ்ச்சியில் 4 பேர் பங்கேற்கிறார்கள். ஒரு பிரச்சனையை நான்கு விதமான கோணங்களில் அலசுகிறார்கள். தனியாக நெறியாளர் யாரும் கிடையாது. பங்கேற்கும் நான்கு பேரில் ஒருவரே நெறியாளராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது