Virtual Krishna Jayanthi celebrated at Velammal

Virtual Krishna Jayanthi celebrated at Velammal

வேலம்மாள் கல்விக்குழுமம் தனது முதல் மெய்நிகர் கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு தனது வளைஒலியின் மூலம் நேரலையாக ஒளிபரப்பியது.

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை குழந்தைகளிடம் ஊக்குவிப்பதற்கு தூண்டுதலாக இருப்பது பண்டிகைகள். கிருஷ்ணரின் பக்தரான  ‌‌ஸ்ரீவிட்டல் தாஸ் மகாராஜ் அவர்கள் அருளுரை மற்றும் பாடல்கள் பாடினார்.இது பார்வையாளர்களிடையே மிகுந்த பக்தி உணர்வைத் தூண்டியது.
ராதா மற்றும் கிருஷ்ணர் வேடம் அணிந்த அனைத்து குழந்தைகளின் முயற்சியையும் சமூக ஆர்வலர் திருமதி. சுமங்கலா ஸ்ரீஹரி அவர்கள் பாராட்டினார். கிருஷ்ணரின் லீலைகள் இயங்கு படமும் (அனிமேஷன்) மற்றும் அவரின் பிறப்பு பற்றிய பொம்மை நிகழ்ச்சியும்(பப்பட் நிகழ்ச்சி)  10000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் மனதை வென்றது.