தமிழகத்தில் வாழும் 30 சதவீத கிறிஸ்தவ வாக்களர்களின் ஆதரவு யாருக்கு?
தமிழகத்தில் வாழும் 30 சதவீத கிறிஸ்தவ வாக்களர்களின் ஆதரவு யாருக்கு?
அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவர்
Rev.Dr.ஜெயசிங் பேட்டி
தமிழகத்தில் வாழ்கின்ற 30 சதவீத கிறிஸ்தவ வாக்காளர்கள், எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கம் இன்னும் இரண்டொரு நாளில் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து, அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும், ஐ.நா சபை நிறுவனத்தின் அமைதி தூதுவரும், கடந்த 2017 ஆம் ஆண்டின் இந்திய குடியரசு தலைவர் வேட்பாளருமான Rev.Dr.ஜெயசிங் அவர்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டு காலமாக தமிழ் நாட்டில் உள்ள 30 சதவீத மக்களில் 75 சதவீதம் பேர் அதிமுக-வுக்கு ஆதரவு அளித்து வந்தனர். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 30 சதவீதத்தில் 75 சதவீத வாக்களர்கள் திமுக-வுக்கு வாக்களித்தனர். காரணம், மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல, பயத்தின் காரணமாகவே வாக்களித்தனர்.
வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில், தமிழகத்தில் உள்ள 30 சதவீத கிறிஸ்தவ மக்கள் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற நிலைபாட்டை எங்களது அகில இந்திய கிறிஸ்தவ நல்வாழ்வு சங்கம் முடிவு எடுக்கும்.
தமிழகத்தை ஆளுகின்ற அதிமுக அரசும், எதிர் கட்சியாக உள்ள திமுக-வும் இதுவரை அகில இந்திய கிறிஸ்தவ நல்வாழ்வு சங்கத்தை அனுகி எந்த ஆதரவும் கேட்கவில்லை.
பொதுவாக கிறிஸ்தவர்கள் சுயமாக சிந்தித்து வாக்கு அளிப்பார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் தேவ ஆலயத்தின் போதகரோ அல்லது பிஷப்போ, அல்லது அரசியல் கட்சிகளில் உள்ள கிறிஸ்தவ அரசியல் தலைவர்களின் பேச்சையோ, கேட்கும் நிலையில் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக இல்லை. அவர்கள் ஜெபத்தில் கடவுளிடம் கேட்டோ அல்லது சுயமாக சிந்தித்து வாக்களிக்கின்றனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் வாழுகின்ற 30 சதவீத கிறிஸ்தவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. ஆகவே கிறிஸ்தவர்களுக்கு முறையான பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் கட்சிக்கே எங்களது ஆதரவு அளிக்கப்படும்.
மேலும் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்த வரையில் தமிழகத்தில் தலைவராக உள்ள திரு.எல்.முருகன், அவர்கள் பொருப்பேற்ற பின்பு
அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று, கிராமங்களில் வாழுகின்ற தலித் கிறிஸ்தவ மக்களுக்கு, ஆதரவு கரம் நீட்டியபடியால், சுமார் 5 சதவீத கிராம தலித் கிறிஸ்தவ மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் Rev.Dr.ஜெயசிங் தெரிவித்தார்.
குறிப்பு : இத்துடன் மாவட்ட வாரியாக கிறிஸ்தவ மக்களின் வாக்கு சதவீத பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.