சிறையிலேயே திருமணம்.. காதலியை மணந்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!

சிறையிலேயே திருமணம்.. காதலியை மணந்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!
சிறையிலேயே திருமணம்.. காதலியை மணந்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!
சிறையிலேயே திருமணம்.. காதலியை மணந்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் தன் நீண்ட நாள் காதலியான ஸ்டெல்லா மோரிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். அசாஞ்சே 10 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமான அமெரிக்க ராணுவ பதிவுகள் மற்றும் ராஜதந்திர விவகாரங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டார். ராணுவ ரகசியங்கள் வெளியிட்டது தொடர்பாக அவர் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.

அவ்வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்க அதிகாரிகள் அவரை நாடு கடத்த முயன்றனர். எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கும் அசாஞ்சே, 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார், அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக இருந்தார்.

50 வயதான ஜூலியன் அசாஞ்சேவுக்கு 2011ம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருக்கும்போது, வழக்கறிஞர் ஸ்டெல்லா மோரிஸ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்டெல்லா 10 ஆண்டுகளுக்கும் மேலாக அசாஞ்சேவின் வழக்கறிஞராக இருந்து வருகிறார். 2015 முதல் காதலர்கள ஆன இருவரும் இணைந்து வாழத் துவங்கினர். ஈக்வடார் தூதரகத்தில் வசிக்கும் போது ஸ்டெல்லா மோரிஸுடன் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார் அசாஞ்சே.

இந்த தம்பதியினர் திருமணம் செய்துகொள்ள கடந்த ஆண்டே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் சிறையில் உள்ள ஜூலியன் அசாஞ்ச், ஸ்டெல்லா மோரிஸை இரண்டு சாட்சிகள் மற்றும் இரண்டு காவலர்கள் என நான்கு விருந்தினர்களுடன் திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு சிறைத்துறை அனுமதி மறுத்தது.