எதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது: ஜோ பிடன் டுவிட்

எதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது: ஜோ பிடன் டுவிட்
எதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது: ஜோ பிடன் டுவிட்

எதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது: ஜோ பிடன் டுவிட்

வாஷிங்டன்: நாம் எதிர்க்கட்சியில் இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது என அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 46ல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களில், 270 பேரின் ஆதரவு பெறுபவரே, அதிபராக அறிவிக்கப்படுவார். அதன்படி, இதுவரை வெளிவந்த முடிவுகளில், ஜோ பிடனுக்கு, 264 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. அதிபர் டிரம்புக்கு, 214 பேரின் ஆதரவே கிடைத்துள்ளது. இதனால் பிடனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான ஓட்டுக்களை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோர்ட்டில் டிரம்ப் தரப்பில் தொடந்த வழக்கு தள்ளுபடியான நிலையில், இன்று மறு ஓட்டுஎண்ணிக்கை நடத்த அம்மாகாண அரசு நிர்வாகம் திடீரென உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், ‛ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தவறாக உரிமை கோரக் கூடாது. தன்னாலும் இதேபோல் உரிமை கோர முடியும். சட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன,' என பதிவிட்டுள்ளார்.

ஜோ பிடனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: தேர்தலுக்கு பிறகு பதட்டமான சூழல் இருப்பதை உணர முடிகிறது. ஆனால் நாம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அரசியலின் நோக்கத்தை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். நாம் எதிர்க்கட்சியில் இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது. நாம் அனைவரும் அமெரிக்கர்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.