கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

108 சேவைக்காக 118 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உடனடி மருத்துவ சேவைக்காக ரூ. 103 கோடி செலவில் கூடுதலாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதில், முதற்கட்டமாக 118 ஆம்புலன்ஸ்கள் இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

கொரோனா சிகிச்சைக்காக இவை பயன்படுத்தப்படும் என்றும் எஞ்சிய வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். இன்று அறிமுகப்படுத்தப்பட்டதில் 90 வாகனங்கள் அரசுடையதும், தனியார் நிறுவனம் சார்பில் 18 வாகனங்களும் செயல்பட உள்ளன. இவை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பிரித்து அனுப்பப்பட உள்ளது.

முன்னதாக, தமிழகம் முழுவதும் தற்போது 1,005 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.