மதுரை மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இறைச்சிக் கடைகளில் கட்டுக்கடங்காமல் கூடினர்

மதுரை மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இறைச்சிக் கடைகளில் கட்டுக்கடங்காமல் கூடினர்

நாடு முழுவதும் கரோனா பரவலைஹ் தடுக்க ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் சமூக விலகலை கடைபிடித்து மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் சமூக விலகலை முழுமையாக கடைபிடிக்காமல் உள்ளனர். குறிப்பாக கிராமங்களில் வீடுகளின் முன்பு மக்கள் ஒரே நேரத்தில் கூடி மணிக்கணக்கில் பேசுவதும், இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டமாக கூடி காளைகளை விரட்டி ஜல்லிக்கட்டு பயிற்சி எடுப்பதும், கோழிகளை சண்டைக்கு விடுவதுமாக பொழுது போக்குகின்றனர்.

மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் நோய் தொற்று பரவாமல் தடுக்க ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறி ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் போலீஸார் கோலப்பொடியால் வட்டமிட்டுள்ளனர்

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மதுரையில் இறைச்சிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இங்கும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று கறி வாங்க கட்டம் போட்டிருந்தாலும் அதை யாரும் மதிக்கவில்லை. கடையை மொய்த்தபடி நின்றே கறி வாங்கினர்.

கடைக்கு வந்தவர்களால் சாலைகளில் இரு சக்கர வாகன நடமாட்டம் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமலில் இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.