திருமழிசை காய்கறி சந்தைக்கு ஞாயிறுதோறும் விடுமுறை
திருமழிசையில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக காய்கறி சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மாற்றாக பூவிருந்தமல்லிக்கு அருகே திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது.
இங்கு செப்டம்பர் மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிக்கும்படி வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே சமயத்தில் கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ந் தேதி திறக்க உத்தரவிட்டுள்ளது.