ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். தீபாவளியையொட்டி இன்று (அக்.20) சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு காலை முதலே ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கையசைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். “ரசிகர்கள் உள்பட அனைவரும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.