ராம் கோபால் வர்மாவின் சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘சாரி’

ஆசை தீவிரமடைந்து கட்டுப்படுத்த முடியாத இச்சையாக மாறும் கதையைக் கூறும், ராம் கோபால் வர்மாவின் சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘சாரி’ லயன்ஸ்கேட் பிளேயில் பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது
~வசீகர தருணம் பின்னர் வக்கிரமான சூழலை உண்டாக்குகிறது. இச்சை, கட்டுப்படுத்துதல் மற்றும் உணர்ச்சிகள் என சாரி மனதை உறைய வைக்கும் த்ரில்லர் திரைப்படமாக உள்ளது~
நண்பர்களுடன் சாதாரணமாக துவங்கும் ஒரு விடுமுறை. சேலை அணிந்த ஒரு பெண். எதேர்ச்சையாக பார்த்த பின்பு கதை ஒரு சுழலுக்குள் இட்டுச் செல்கிறது. நிஜ வாழ்க்கை நிகழ்வுகளால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்ட சாரி ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படமாகும்; இது படத்தைக் காண்பவர்களிடம் ஒரு ஆழமான நெருடலான கேள்வியை எதிர்கொள்ள வைக்கிறது: ஆன்லைனில் உங்களோடு உரையாடும் நபர்களை உங்களுக்கு எந்தளவிற்கு நன்றாகத் தெரியும்? ஒரு ஆன்லைன் ஈர்ப்பாக ஆரம்பமாவது, நிற்காமல் பின்தொடர்வது, உணர்வுகளை வைத்து மனதை மாற்றுவது என இறுதியாக கட்டுப்படுத்த முடியாத தீவிர சிக்கலாக முடிகிறது. ஆராத்யா தேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தில், ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்ட கிட்டு என்கிற புகைப்படக் கலைஞராக சத்யா யது நடித்துள்ளார். கதாநாயகியை சேலையில் பார்க்க அது அவரை முழுவதுமாக ஒரு இச்சையின் சுழலில் சிக்க வைக்கிறது. பாராட்டு ஒரு கட்டுப்படுத்தலாக மாற, நிராகரிப்பு ஆத்திரத்தைத் தூண்ட, அவனது இச்சை அவளைச் சுற்றியுள்ள அனைத்தையும் பயமுறுத்தத் தொடங்குகிறது.
ராம் கோபால் வர்மா எழுதி வழங்க, கிரி கிருஷ்ணா கமல் இயக்கியுள்ள இந்த சாரி ஒரு படம் மட்டுமல்ல - இது டிஜிட்டல் யுகத்தில் நிலவும் இச்சை, மோகம் மற்றும் அதன் பயங்கரமான விளைவுகள் பற்றிய ஆபத்தான கண்ணோட்டத்தினை வெளிப்படுத்துகிறது. வரும் ஜூன் 27 முதல் லயன்ஸ்கேட் ப்ளே தளத்தில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ள, இந்த படபடப்பான சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் கட்டுப்படுத்தாத ஆசையினால் உருவாகும் ஒரு திகிலூட்டும் அத்தியாத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
சாரி திரைப்படம் பற்றி பேசிய, திரைப்படக் கலைஞரான, ராம் கோபால் வர்மா, "சாரி என்பது வெறும் கற்பனை கதை மட்டுமல்ல - இது இன்று பெரிதளவில் பொதுவான ஒன்றாக மாறி வரும் டிஜிட்டல் தளங்களில் அனுமதியின்றி பின்தொடரப்படும் ஆபத்தின் திகிலூட்டும் யதார்த்தத்தினை ஆழமாக வெளிகாட்டுகிறது. இன்று, உறவுகள் நிஜ வாழ்க்கையை விட ஆன்லைனில் வேகமாக உருவாகின்றன; பெரும்பாலும் அந்தப்பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை உண்மையிலேயே அறியாமலேயே பலர் அத்தகைய உறவுகளை நாடுகின்றனர். சாரி திரைப்படத்தின் மூலம், நான் மேலோட்டமாக கடந்து செல்லாமல் அதன் உள்ளே சென்று, சமூக ஊடகத்தில் ஒருவருடனான உரையாடல், அல்லது ஒருமுறை பார்ப்பது என்பன போன்ற ஒரு பாதிப்பில்லாத செயல் - எப்படி மனதைப் பதைப்பதைக்க வைக்கும் சுழலுக்குள் நம்மை சிக்கவைக்கலாம் என்பதைக் காட்ட விரும்பினேன். அன்பாக ஆரம்பிப்பது விரைவில் கட்டுப்படுத்தலாக மாறும், அன்பு என்ற போர்வையில் வரும் கட்டுப்படுத்தல் வெறுப்பை விட பயங்கரமானதாகும். இந்த படத்தை உருவாக்கும் அனுபவம் மிகவும் திகிலாக இருந்தது, ஏனெனில் இது சில சங்கடமான உண்மைகளை எதிர்கொள்ள என்னைக் கட்டாயப்படுத்தியது,” என்றார்.