நடிகர் ரகுமானை காண கேரள படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள் !
நடிகர் ரகுமானை காண கேரள படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள் !
பல மொழிகளிலும் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் ரகுமான், கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, அவரை காண பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்தனர்.
தமிழ், தெலுங்கு,மலையாளம் பல மாநிலங்களிலும் முன்னணி நடிகராக வலம் வருவபவர் நடிகர் ரகுமான். 1980 களில் நாயகனாக களமிறங்கியவர், தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் பல ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை தந்துள்ளார். நாயகனாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் அசத்தினார்.
சமீபத்தில் தமிழில் அவர் நடித்த “துருவங்கள் பதினாறு” படம் தந்த வெற்றி, திரையுலகில் மீண்டும் அவரை நாயகானாக முன்னிறுத்தியுள்ளது.
தற்போது . மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்கும் ரகுமான், பாலிவுட்டின் மூன்று முறை தேசிய விருது பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கும் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான ' கண்பத்' என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஹைபர் லிங் திரைப்படமாக உருவாகும் “நிறங்கள் மூன்று” படத்தில் மூன்று நாயகர்களில் ஒரு நாயகனாக நடிக்கிறார். தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளிலும் மிகப்பிஸியான நடிகராக நடித்து வருகிறார்.
நடிகர் ரகுமானுக்கு தமிழகத்திலும் கேரளத்திலும் இருந்த ரசிகர் மன்றங்கள் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. சமீபத்தில் கேரளாவில் தனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்க, உடனடியாக போனில் நேரடி தொடர்புக் கொண்டு பேசி ஆறுதல் கூறினார். அதன்பின்பு தனது ரசிகர் மன்றம் மூலம் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்துள்ளார், ரகுமான்.
இதனை தொடர்ந்து  கேரளாவில்  “எதிரே” படப்பிடிப்பில் இன்று ரகுமான் கலந்துக் கொண்டார்.. அவர் வந்த செய்தியறிந்து  ரசிகர்கள் அவரை காண குவிந்தனர். இந்நிலையில் தனது ரசிகர் மன்ற செயலாளர் அமல் மற்றும் தலைவர் தீபு லால் ஆகியோரை வரவழைத்து, அனைத்து ரசிகர்களையும் சந்தித்துள்ளார் ரகுமான். நடிகர் ரகுமானுக்கு, தமிழகத்திலும், கேரளாவிலும் பல புதிய ரசிகர் மன்றங்கள் தோன்றிவருகின்றன. 
 — ஜான்சன்.
                        
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        