இனியா - கார்த்தீஸ்வரன் நடிக்கும் 'எர்ரர்'
இனியா - கார்த்தீஸ்வரன் நடிக்கும் 'எர்ரர்'
'திலகா ஆர்ட்ஸ்' சார்பாக எஸ்.டி.தமிழரசன் தயாரிக்கும் 'Error' படத்தை அறிமுக இயக்குனர் ஜி. பி. கார்த்திக் ராஜா இயக்குகிறார். இவர் தொலைக்காட்சிகளில் விஷ்வல் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.'பேய் இருக்க பயமேன்' திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் எடிட்டராகவும் பணியாற்றினார்.
நாயகனாக 'பேய் இருக்க பயமேன்' திரைப்பட நாயகன் கார்த்தீஸ்வரன் நடிக்கிறார். நாயகியாக இனியா நடிக்கிறார்.
இப்படத்திற்கு இசை பிரேம்ஜி அமரன். ஒளிப்பதிவு விவேக்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.
                        
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        