’லவ் மேரேஜ்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’லவ் மேரேஜ்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’லவ் மேரேஜ்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’லவ் மேரேஜ்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் பிரபுக்கு 33 வயதாகியும் திருமணமாகவில்லை. அவருக்காக பார்க்கும் பெண்கள் எல்லாம் அவரை நிராகரிக்க, ஒருவழியாக கோவை மாட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா பட் அவரை திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கிறார். அதன்படி, பெண் வீட்டில் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற, அன்றைய இரவு மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  

 

இதற்கிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், மேலும் சில நாட்கள் பெண் வீட்டிலேயே மாப்பிள்ளை குடும்பத்தார் தங்குகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் சுஷ்மிதாவுடன் பேசி பழக விக்ரம் பிரபு முயற்சிக்கிறார். ஆனால், அவர் விக்ரம் பிரபுவின் முகம் பார்த்து கூட பேசாமல் தவிர்ப்பதோடு, திடீரென்று ஒரு நாள், வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.அதன் பிறகு என்ன நடந்தது?, விக்ரம் பிரபுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை கலகலப்பாக சொல்வதே ‘லவ் மேரேஜ்’.

 

விக்ரம் பிரபு திருமணம் ஆகாத சோகத்துடன் வலம் வந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் அடக்கி வாசித்தாலும் இறுதியில் பொங்கி எழும் காட்சியில் கூட அளவாக நடித்து ரசிகர்களை கவரும் விக்ரம் பிரபு, நடிப்பில் இதுவரை பார்த்திராத வித்தியாசத்தை இந்த படத்தின் மூலம் காட்டியிருக்கிறார்.  

 

நாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதா பட் சில காட்சிகளில் அழகாக இருக்கிறார், சில காட்சிகளில் அதிகம் வயதுள்ளவர் போல் தெரிகிறார். இருந்தாலும், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். 

 

நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ் என அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள். 

 

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. பரத் விக்ரமனின் படத்தொகுப்பிலும் குறையில்லை. 

 

எழுதி இயக்கியிருக்கும் சண்முக பிரியன் காதல் கதையை, கலகலப்பான குடும்ப கதையாக இயக்கியிருக்கிறார். காதல் கொஞ்சமாக இருந்தாலும், கலகலப்பும், பொழுதுபோக்கும் அதிகமாகவே இருக்கிறது. 

 

குடும்பத்துடன் பார்க்க கூடிய படத்தை கொடுத்திருக்கும் ‘லவ் மேரேஜ்’-குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.