தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் கதானாயகனாகவும் முக்கிய முக்கிய கதாபத்திரத்திலும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ரஹ்மான். பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட இவர் இன்று 23.5.2023 தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் கதானாயகனாகவும் முக்கிய முக்கிய கதாபத்திரத்திலும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ரஹ்மான். பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட இவர் இன்று 23.5.2023 தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுகிறார்.
இவர் தற்போது,
தமிழில், ரவி சந்திரா இயக்கும் 'அஞ்சாமை ' ,
கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் ' நிறங்கள் மூன்று ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்க,
அமல் K ஜோப் இயக்கும் 'ஏதிரே ',
சார்ல்ஸ் இயக்கும் 'சமாரா' மற்றும் ஹிந்தியில் ரஹ்மான் அறிமுகமாகும் பிரம்மாண்ட படம் 'கண்பத் ' .
' குயின் ' புகழ் விகாஸ் பால் இயக்கும் இப்படத்தில் ரஹ்மானும்,
டைகர் ஷார்ஃபும் அமிதாப் பச்சனின் பிள்ளைகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. ரஹ்மான் கதா நாயகனாக நடிக்கும் முதல் வெப் சீரீசை டிஸ்னி ஹாட் ஸ்டாருக்காக  பிரபல மலையாள நிறுவனமான ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிக்கிறது.
நஜீம் கோயா இதனை இயக்குகிறார். '1000 பேபீஸ் ' என்று பெயர் சூட்ட பட்டுள்ள இந்த வெப் சீரீஸின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 1- ம் தேதி கொச்சியில் துவங்கியது.
- JohnsonPro
                        
                    
                    
                    
                    
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        