VFX ல் மிரட்டும் ரெட் ஃபிளவர் திரைப்படம் !!
VFX ல் மிரட்டும் ரெட் ஃபிளவர் திரைப்படம் !!
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் "ரெட் ஃபிளவர்" !!
விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்டத்தை எட்டிய "ரெட் ஃபிளவர்" திரைப்படம் !!
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் "ரெட் ஃபிளவர்" திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் தற்போது உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் துவங்கியுள்ளது.
எதிர்காலத்தின் கற்பனைக்கெட்டாத சாத்தியங்களை, துல்லியமாகக் காட்டும், ஒரு பிரம்மாண்டமான படைப்பாக, தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத ஒரு புதுமையான படைப்பாக, இப்படம் உருவாகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ், விஜயவாடா, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட உலகின் சில முன்னணி VFX மையங்களில் படத்தின் விரிவான விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பணிகள் தற்போது துவங்கி, பரபரப்பாக நடந்து வருகிறது.  மேலும் 
மோஷன் கேப்சர் சிஜி காட்சிகள் (Motion Capture CGI )  டொராண்டோவில் செயல்படும் பிரம்மாண்ட  ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.   அனைத்து VFX பணிகளும் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பிரபாகரனின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. ஒரு தமிழ் சினிமாவிற்காக உலகின் இத்தனை இடங்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பணிகள் நடைபெறுவது, இதுவே முதல் முறையாகும். இதுவரை இல்லாத வகையில், மிகப்புதுமையான பிரம்மாண்டமான காட்சி வடிவத்தை, ரசிகர்களுக்குத் தர வேண்டுமென்ற நோக்கத்தில், தயாரிப்பாளர்கள் இப்படத்தினை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். 
திரைத்துறையில் கலர் கிரேடிங் பணிகளுக்காக மிகவும் பிரபலமான பிரான்சிஸ் சேவியர், “ரெட் ஃபிளவர்” படத்திற்கான கலர் கிரேடிங் பணிகளைச் செய்து வருகிறார். இப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் சர்வதேச தரத்தில் இருக்குமாறு, மேம்பட்ட நுட்பங்களையும், அதிநவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளார் பிரான்சிஸ் சேவியர்.
விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் தேவா சூர்யா மற்றும் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் ஆகியோருடன் இணைந்து பிரான்சிஸ் சேவியர் இப்படத்தின் கற்பனை உலகத்தை, மிகத்துல்லியமாக பிரமிக்க வைக்கும் வகையில் திரையில் கொண்டு வர பணியாற்றி வருகிறார்.
"ரெட் ஃபிளவர்"  இயக்குநர்  ஆண்ட்ரூ பாண்டியன் படம் குறித்து கூறுகையில்..,
உண்மையில் போஸ்ட் புரடக்சனில் தான் படத்தினை முழுமையாக்கும் மேஜிக் நடக்கும். எதிர்காலத்தை உயிர்ப்பிக்கும் எங்கள் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள், நியூ ஜெர்சி, அட்லாண்டா, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை என உலகம் முழுவதும் நடக்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில், ஒரு  கற்பனை உலகத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கவுள்ளோம். 
தயாரிப்பாளர் கே.மாணிக்கம் படம் குறித்து கூறுகையில்..,
இப்படத்தை ஆரம்பிக்கும்போதே  தமிழ் சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, ஒரு புதுமையான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று தான் ஆரம்பித்தோம்.  "ரெட் ஃபிளவர்"  தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கிய படைப்பாக இருக்கும்.  VFX பணிகள்  சர்வதேச அளவில் நடந்து வருகிறது. ரசிகர்கள்  இதற்கு முன் பார்த்திராத அதிநவீனத்தையும், யதார்த்தத்தையும் இப்படத்தில் கண்டுகளிக்கலாம். 
நடிகர் விக்னேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடிக்கிறார். நாசர், ஒய் ஜி மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், நிழல்கள் ரவி, அஜய் ரத்னம், லீலா சாம்சன், டி எம் கார்த்திக், யோக் ஜேபி, கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய் மற்றும் மோகன் ராம் ஆகியோர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 
டிஸ்டோபியன் எதிர்காலத்தில் அமைக்கப்பட்ட,"ரெட் ஃபிளவர்" , சவால்கள் மற்றும் ஆபத்துகள் நிறைந்த உலகத்தில், பல சிக்கல்களுக்கு நடுவில்,  நம்பிக்கையுடனும் வீரத்துடனும்  பயணிக்கும் கதாநாயகனின் கதையைச் சொல்கிறது.  தனித்துவமான  கதையமைப்பில், அதிரடி ஆக்சன் காட்சிகளுடன்,  இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு புதுமையான களத்தில், இப்படம் ரசிகர்களை அசத்தும்.
                        
                    
                    
                    
                    
                    
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        