கொரோனா: சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 636 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 73 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை மட்டும் 31 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வீடு திரும்பி வருவதாக சீன சுகாதாரத்துறை கூறியுள்ளது. வுகான் நகரில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 5 குழந்தைகள் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பு: உலக சுகாதார அவசர நிலையாக பிரகடனம் !
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சீன அரசு 68 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.