தினமும் திருக்குறள் ஒப்பியுங்கள் : வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவிப்பு
தினமும் ஒரு திருக்குறளை ஒப்பித்து அதற்கான விளக்கம் சொல்ல வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, வழக்கறிஞர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதுசம்பந்தமாக இன்று, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது :
'தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளைப் படித்து , அதை மனப்பாடம் செய்ய வேண்டும் என கருதுகிறேன். எனவே, இன்றிலிருந்து நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கும் ஒரு வழக்கறிஞரை தேர்வு செய்கிறேன்,
அதன் அடிப்படையில் தினமும் மதியம் அல்லது மாலை வேளையில் ஒரு திருக்குறளை ஒப்பித்து, அதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்' என அதில் கூறப்பட்டுள்ளது. நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தமிழார்வளர்கள் பெரிதும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.