தீபாவளி பட்டாசு வெடித்ததில் இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது

தீபாவளி பட்டாசு வெடித்ததில் இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது

அரும்பாக்கம் அன்னை சத்தியா நகரைச் சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி கலைவாணி. இவர் தீபாவளி அன்று இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகே நடந்து போய் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த பட்டாசு கலைவாணியின் முகத்தில் விழுந்து வெடித்தது. இதில் அவரது கண்ணில் பலத்த காயம் உண்டானது .

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றார். தீக்காயம் அடைந்த கண்ணின் பார்வையில் குறைபாடு இருப்பதுபோல தெரிந்தது. இதையடுத்து கலைவாணி ஸ்கேன் பண்ணி பார்த்தார். அப்போது அந்த குறைபாடு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலைவாணி சூளைமேடு போலீசில் புகார் அளித்தார் . அதில் தீபாவளி அன்று யாரோ தூக்கி வீசிய பட்டாசு வெடித்ததில் எனது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .