'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர் வேண்டுகோள்

'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர் வேண்டுகோள்

சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கடந்த 5 நாட்களாகப் புதுக்கோட்டை மக்களுக்கு மனுநீதி முகாம்களின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இவர், ஒவ்வொரு இடங்களாகச் சென்று மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். ஒவ்வொரு இடத்திலும் அமைச்சருக்குத் தொண்டர்களும் பொதுமக்களும் சால்வை அணிவித்துள்ளனர். கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பது வழக்கமான செயல் தான்.

ஆனால், அமைச்சர் ஒவ்வொரு இடத்திலும் சால்வை அணிவிப்பதால் மனு வாங்குவதற்குத் தாமதம் ஆகிறது என்று கூறி இனிமேல் எனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக எழுதத் தெரியாதவர்களுக்கு இரண்டு மனுக்களை எழுதிக் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.