திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 

திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 
திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 
திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 
திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 
திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 
திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 
திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 
திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 
திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 
திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 

திகட்டத் திகட்ட சிரிப்பு... சிரிக்க சிரிக்க உற்சாகம் - இது நம்ம 'கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0' 

ஸ்பெஷல் பார்ட்னராக (Special Partner) டக்கர் மசாலாவை  கொண்டிருக்கும்  இந்நிகழ்ச்சியின் அறிமுக எபிசோட், 2021 ஆகஸ்ட் 1 முதல் ஞாயிறு தோறும் இரவு 7  மணிக்கு ஒளிபரப்பாகிறது

ரோபோ சங்கர், ஷகீலா, மதுமிதா ஆகியோர் நடிக்கும் இப்பிரமாண்ட நிகழ்ச்சியில் செலிபிரிட்டி விருந்தினராக நடிகை வரலட்சுமி சரத்குமார் பங்கேற்கிறார்

 

 

சென்னை, 30 ஜூலை 2021: தமிழகத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0 என்ற புத்தம் புதிய நையாண்டி காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. டக்கர் மசாலாவை ஸ்பெஷல் பார்ட்னராக (Special Partner) கொண்டிருக்கும்  இந்நிகழ்ச்சி   வரும் ஆகஸ்ட் 1 முதல் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, நக்கலும் நையாண்டியும் கொண்ட ராஜா ஜல்சானந்தா (நடிகர் ரோபோ சங்கர்) என்பவரின் கன்னித் தீவில் நிகழ்கின்ற பல்வேறு நிகழ்வுகளை நகைச்சுவையுடன் சொல்கிறது, இது சிரிப்பின் உச்சத்திற்கே உங்களை அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம்.  இந்த தீவுக்கு நேரில் சென்று பார்க்க பல நட்சத்திரங்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில், இந்த தொடக்க எபிசோடில், மக்களின் மனம் கவர்ந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் கன்னித்தீவுக்கு பயணிக்கிறார்..
 
பிரமாண்ட அமைப்பை கொண்டிருக்கும் இந்த கன்னித்தீவு பார்வையாளர்களை முற்றிலும் புதிய உலகம் ஒன்றிற்கு எடுத்துச் செல்வது நிச்சயம்.  ஒரு மணி நேரம் நடைபெறும் இந்நிகழ்ச்சி, நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும்.  ஒவ்வொன்றும் மற்றொன்றை விட கூடுதல் கேளிக்கையை தருவதாக இருக்கும்.  பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கருடன் சேர்ந்து இந்நிகழ்ச்சியில் தமிழ் தொலைக்காட்சியை சேர்ந்த புகழ்பெற்ற நடிகர், நடிகைகளும் இடம்பெறுகின்றனர்.  பேபி மாதா என்ற பெயரில் ஒரு புதிய அவதாரத்தை நடிகை ஜாங்கிரி மதுமிதா இதில் எடுத்திருக்கிறார்.  பிரபல நடிகை ஷகீலா ராஜமாதாவாக இதில் நடித்திருப்பது இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் உற்சாகத்தை உருவாக்கும்.  ஒவ்வொரு ஞாயிறன்றும் நடைபெறுகின்ற இந்த காமெடி கிளப்பில் ஆல் ஆக்சஸ் ராஜகுரு என்ற கதாபாத்திரத்தில் திண்டுக்கல் சரவணனும், R&D பிரிவின் விஞ்ஞானிகளாக பிரபல காமெடி இரட்டையர்கள் முல்லை மற்றும் கோதண்டம் ஆகியோரும் மேலும் ராஜாவை குதூகலப்படுத்தும் கதாபாத்திரத்தில் அமுதவாணனும் இணைந்து கலக்கல் காமெடியை வழங்குகின்றனர்.
 
இந்நிகழ்ச்சி தொடங்கப்படுவது குறித்துப் பேசிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிசினஸ் ஹெட் (Business Head) திரு. அனூப் சந்திரசேகரன்,  “கன்னித் தீவு – உல்லாச உலகம் 2.0 – ஐ தொடங்குவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம்.  காமெடி உலகில் மக்கள் மனம் கவர்ந்த பிரபல நடிகர்கள் பெரும்பாலானோர் இந்நிகழ்ச்சியில் இணைந்திருப்பதால், தமிழ் பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சி தளத்தில் ஒரு புதிய பாதையை இந்நிகழ்ச்சி நிச்சயம்  அமைக்கும்.  புத்துணர்ச்சி யூட்டுகின்ற மாறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்குவது என்ற எங்களது நோக்கமே இத்தகைய புதுமையான மற்றும் சிறப்பான சிந்தனையில் உதயமாகின்ற நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கு எங்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. ராஜா ஜல்சா மற்றும் அவரது தீவின் குடியிருப்புவாசிகள், இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கிய உடனேயே அனைத்து இல்லங்களிலும் தினசரி உச்சரிக்கும் நபர்களாக மாறிவிடுவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.
 
இந்நிகழ்ச்சி பற்றி பேசிய பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், “கலர்ஸ் தமிழ் போன்ற மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட தொலைக்காட்சியில் எனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  கன்னித்தீவு என்ற இந்த ஐடியா மிக தனித்துவமானதும், புதுமையானதுமாக இருக்கிறது.  இதில், ராஜா ஜல்சானந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு பெரும்மகிழ்ச்சியும், திருப்தியும் இருக்கிறது.  திறமைமிக்க பல நடிகர்களோடு சேர்ந்து பணியாற்றுவது இன்னும் சிறப்பான உணர்வைத் தருகிறது.  சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் அளவுக்கு இந்நிகழ்ச்சி இருக்கப்போகிறது.  மிகவும் சிரத்தையோடு நாங்கள் பணியாற்றி வந்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியை எமது ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதற்கு வெகு ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று கூறினார்.
 
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 1, ஞாயிறு இரவு 7 மணி முதல் ஒளிபரப்பைத் தொடங்கும் கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0 கண்டு உற்சாகத்தில் திளைக்க தயாராகுங்கள்.  அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ பார்வையாளர்கள் டியூன் செய்யலாம்.
 
 
 
 கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவந்திருக்கின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். பெண்களையும் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். 'இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும்.  வேலு நாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

 

வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.