உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியாகிறது

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியாகிறது
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியாகிறது

சென்னை: தேர்தல் தேதியை அறிவித்து அறிவிப்பாணை வெளியிடப்படுவதற்கு முன்னதாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்கூட்டியே தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பாணை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாகவும், நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ம் கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலை டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.