டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது

டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது

டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனஜ் மண்டி என்ற நன்கு மாடி கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தனர். அந்த கட்டிடத்தில் உடனடியாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லி அரசு, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. நேற்று தீ விபத்து ஏற்பட்ட அதே கட்டிடத்தில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்ததும், நன்கு தீ அணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.