“மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் *பீம்* கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் பிரவீன் குமார் காலமாகி இருக்கும் சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
“மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் *பீம்* கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் பிரவீன் குமார் காலமாகி இருக்கும் சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு திரை உலகிற்கு வெளி வந்த படம் தான் “மைக்கேல் மதன காமராஜன்”. இந்த படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, நாகேஷ், கிரேசி மோகன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் தான் இசை அமைத்து உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப் படமாக உருவானது. இதில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நான்கு வேடத்தில் நடித்த படத்தில் இவரும் நடித்து இருந்தார். இவர் 1947 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் பிரவீன் குமார் ஆகும். இவர் 1988 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான *‘மகாபாரதம்’* என்ற தொடரில் பீமனாக நடித்து உள்ளார்.