வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகள் தொடக்கம்..

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகள் தொடக்கம்..

மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

2020 -2021ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பட்ஜெட்டுக்கு முந்தைய முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், நிதிச்சேவை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், ஏற்றுமதி துறையில் இருக்கும் போட்டிகள், தனியார் முதலீடுகள், தொழில் தொடங்குவதற்கான சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நிறுவன பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.