பெங்களூரில் பட்டப் பகலில் வாலிபர் படுகொலை
செப்டம்பர் . 14 – குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த கணேஷ் என்ற குந்திராபி கணேஷ் (34) என்பவரை நேற்று பட்டப்பகலில் தடுத்து நிறுத்தி கத்தி மற்றும் வீச்சரிவாளால் தாக்கி கொலை செய்த ஐந்து பேரை இந்த கொலை நடந்த சிலவே மணிநேரங்களில் கைது செய்வதில் சேஷாத்திரிபுரம் போலீசார் வெற்றியடைந்துள்ளனர் . சேஷாதிரிபுரத்தை சேர்ந்த ஜெயசாமராஜேந்திர உடையார் நகரை சேர்ந்த ஷரத்குமார் (31), சத்யா (29) வி வி கிரி காலனியை சேர்ந்த சரண் (26) ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த கௌதம் நகர் ஜான் (23) ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் என டி சி பி ஸ்ரீனிவாஸ் கௌடா தெரிவித்தார். சேஷாதிரிபுரத்தின் ஜி சி டபுள்யூ நகரில் நரசிம்மா மற்றும் ஷண்முகவள்ளி என இரண்டு குடும்பங்கள் வசித்து வந்தன. நரசிம்மாவின் மகனான கொலையுண்ட கணேஷ் இதை கண்டு பொறுக்காத ஷண்முகவள்ளி குடும்பத்தை சேர்ந்த ராஜு , வினோத் , ஷரத்குமார் , அஜீத்குமார் மற்றும் சிலர் சேர்ந்து கொலையுண்ட கணேஷ் மற்றும் அவன் குடும்பத்தாரிடம் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு குறித்து சேஷாதிரிபுரம் போலீஸ் நிலையத்தில் இரண்டு கோஷ்டிகளும் புகார் மற்றும் எதிர் புகார் கொடுத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் கோஷ்டியினர் கணேஷை நேற்று வழிமறித்து கொலை செய்துள்ளனர்.