சிட்ரான் நிறுவனம், சிட்ரான் சி5 ஏர்கிராஸ் பேஸ் லிப்ட் மாடலை அறிமுகம்
சிட்ரான் நிறுவனம், சிட்ரான் சி5 ஏர்கிராஸ் பேஸ் லிப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அறிமுகச்சலுகையாக, ஷோரூம் விலை ரூ.36.67 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த மாடல் உட்புறமும் வெளிப்புறமும் புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் 8 அங்குலமாக இருந்த தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், தற்போது 10 அங்குலமாக அமைக்கப்பட்டுள்ளது.
சிட்ரான் நிறுவனம் வெளிநாட்டு சந்தையில் தனது டீசல் இன்ஜின் மாடல் உற்பத்திய படிப்படியாக நிறுத்தி வருகிறது. ஆனால் இந்த மாடல் 2.0 லிட்டர் டீசல் இ்ஜின் கொண்டதாக உள்ளது. சி5 பேஸ்லிப்ட் மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டுக்சான், போக்ஸ்வேகன் டிகுவான் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.