நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு

நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு

நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட சாஷா என்ற பெண் சிவிங்கிப்புலி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

இந்தியாவில் சிவிங்கி புலிகள் இனம் அழிந்து விட்ட நிலையில், அதனை மீள் அறிமுகம் செய்யும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. அதன் படி, கடந்தாண்டு பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி நமீபியாவில் இருந்து முதற்கட்டமாக 8 சிவிங்கிப்புலிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. இவை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன.

அதில், சாஷா என்ற பெண் சிவிங்கி புலிக்கு, இந்தியாவிற்கு அழைத்து வரும் முன்னரே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சாஷாவிற்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சாஷா சிவிங்கிப்புலி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் ஆப்ரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டன. இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 20 சிவிங்கிப்புலிகள் இருந்தது. தற்போது சாஷா மறைவால் நாட்டில் உள்ள சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 19 ஆக குறைந்துள்ளது.