அண்ணா பல்கலைக்கழகம் முடிவு இணைய வழியில் இறுதி பருவத் தேர்வுகள்

அண்ணா பல்கலைக்கழகம் முடிவு இணைய வழியில் இறுதி பருவத் தேர்வுகள்

மாணவர்களின் இறுதிப் பருவத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் இணைய வழியில் இறுதிப் பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்படும் ஒரு வாரத்திற்கு முன்பு முன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான முறையில் விடைகளை தேர்வு செய்யும் வகையில் தேர்வு நடைபெறும் எனப்பட்டுள்ளது.