‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’

‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’
‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’

நாகர்கோவில்: பெங்களூரு ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்கள் அப்துல் மத்தீன் தாஹா, முசாவிர் உசேன் ஷாசிப் ஆகிய இருவரும் குமரி எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என வட மாநில தனியார் செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அப்துல் மத்தீன் தாஹா, முசாவிர் உசேன் ஷாசிப் ஆகிய இருவரும் கன்னியாகுமரி எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அல்ல. இருவரும் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் தீர்த்த ஹல்லி பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும் தற்போது சிறையில் உள்ள பெங்களூருவை சேர்ந்த மஹ்பூப் பாஷா தலைமையிலான அமைப்பில் (கர்நாடகா) இயங்கியவர்கள். தனியார் செய்தி சானல் செய்தி பொய்யானது என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது,’என்று கூறப்பட்டிருந்தது.