மோடி வைத்த பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்

மோடி வைத்த பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்
மோடி வைத்த பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்

புதுடில்லி: நிலவின் தென் பகுதியில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி' என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்து உள்ளது.

கடந்த ஆண்டு ஆக.,23 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையக கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டினார். மேலும், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை குறிக்கும் வகையில் ஆக.,23ம் தேதி ‛ தேசிய விண்வெளி தினம்' ஆக கொண்டாடப்படும் என அறிவித்ததுடன், நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு ‛சிவசக்தி' என பெயர் வைத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி ' பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம் அளித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ‛‛ விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சூட்டப்பட்ட ‛சிவசக்தி' என்ற பெயருக்கு, கோள்களுக்கு பெயர் சூட்டுவதற்கான சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளது'' எனக்கூறப்பட்டு உள்ளது.