CSI Kancheeepuram Chapter Bags More Than Fifteen Awards
முதன் முறையாக, இந்தியக் கணினி சமுதாய அமைப்பின் காஞ்சிபுரம் இயல் பிரிவு 15 க்கும் அதிகமான விருதுகளை,இந்தியக் கணினிசமுதாய அமைப்பின் 53 வது ஆண்டு பேரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில்,வாஷிங்டன் மாகாணத்தின்ஐ.எப்.ஐ.பி யின் தலைவர் பேராசிரியர் மைக் ஹின்சி மற்றும் ஒரிசா மாநிலத்தின் உயர்நிதிமன்ற நீதிபதி சஞ்சய் மிஷ்ரா ஆகியோரால்,இந்தியக் கணினி சமுதாய அமைப்பின்காஞ்சிபுரம் இயல் பிரிவின் தலைவர் முனைவர் பா சிதம்பரராஜன்அவர்களுக்கு விருதுகள்வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த பேரவைக் கூட்ட நிகழ்வானது 16.01.2020 அன்று முதல் 18.01.2020 அன்று வரை புவனேஸ்வரரில் உள்ள KIIT பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில்,பிரதமர் அலுவலகத்தின் மின்வெளி பாதுகாப்பு அலுவலர்குல்சன் ராய், KITT பல்கலைக்கழகத்தின் நிறுவனரும்,காந்தமால் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினருமானஅச்சுத சமந்தா,மற்றும்தேசியத் தரமதிப்பீட்டுக் குழுத் தலைவர் K.K அகர்வால்ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வைச்சிறப்பித்தனர். இந்தியக் கணினி சமுதாய அமைப்பின் காஞ்சிபுரம் இயல் பிரிவிற்கு சிறந்த மண்டல அமைப்பு,சிறந்த புரவலர், சிறந்த பங்களிப்பு, சிறந்த செய்தி மடல் போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகள்வழங்கி கௌரவிக்கப்பட்டது .
இந்தியக் கணினி சமுதாய அமைப்பின் காஞ்சிபுரம் இயல் பிரிவின் இணைப்புக் கல்லுரிகளான, SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, சாய்ராம்தொழில்நுட்ப நிறுவனம்ஆகிய கல்லூரிகளுக்கு, 2017-2018 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவ அமைப்பு, தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை அளித்து வரும் மாணவ அமைப்பிற்கான ஒருங்கிணைப்பாளர் போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
இந்தியக்கணினி சமுதாய அமைப்பின் காஞ்சிபுரம் இயல்பிரிவு தனது சிறப்பான செயல்பாட்டிற்கான தேசிய அளவிலான விருதுகள் பெற்று தென்னிந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்நிகழ்வில் இந்திய கணினி சமுதாய அமைப்பின் காஞ்சிபுரம் இயல் பிரிவின் தலைவர் முனைவர் பா சிதம்பரராஜன் மற்றும் அந்த அமைப்பின் செயல்பாட்டாளர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்த்துக்களும் தெரிவித்துக் கொன்டனர்.